
தமிழகம் முழுவதும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, கோவில்பட்டு உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஒ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் சென்றனர்.
ஆனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நிரந்தரமாக தடையை நீக்கிவிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என கூறி, அனைவரையும் ஓட ஓட விரட்டியடித்தனர். அவர்களிடம் சமரசம் பேச சென்ற கலெக்டர்களும், விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரை தமுக்கம் மைதனாத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரமோகன்(48) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரிசோதனை செய்த டாக்டர், சந்திரமோகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒருவர் பலியான சம்பவம் மதுரையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.