பதற்றமான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..!

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
பதற்றமான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..!

சுருக்கம்

பதற்றமான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..!

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது.ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது. பணம் மதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், வர்தா புயல் பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இடையே இக்கூட்டத்தாெடா் நடைபெறுகிறது. 

ஜல்லிக்கட்டு பிரச்சனை உலகம் முழுவதும் தலைவிாித்தாடும் இந்த சூழ்நிலையிலும், ஜல்லிக்கட்டுக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு தீா்வு ஏற்படாத நிலையிலும், நாளை தொடங்க உள்ள கூட்டத்தொடரிலேயே சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

இந்நிலையில் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி  வருகிறார். இதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!