
ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் டிஐஜி க்களாக பதவி உயர்வு…12 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு ….உள்துறை செயலாளர் உத்தரவு..
2003 ஆம் பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
தமழக அரசில் உயர் போலீஸ் அதிகாரிகளாக பணிபுரியும் 2003 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகளாக அமித் குமார்சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதீப் குமார் மற்றும் ஆர்.சுதாகர் ஆகிய 5 அதிகாரிகள் டிஐஜி க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதே போன்று செந்தில் வேலன், அவினாஷ் குமார், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, லலிதா லட்சுமி, காமினி , மகேஸ்வரி, அஸ்ரா கர்க்,ஆசியம்மாள், ராதிகா, ஜெய கௌரி, துரை குமார் உள்ளிட்ட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.