எம்.ஜி.ஆர் தமிழர்களின் பரிசு... அந்தர் ‘பல்டி’ அடித்த மோடி...

 
Published : May 12, 2017, 06:22 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
எம்.ஜி.ஆர் தமிழர்களின் பரிசு... அந்தர் ‘பல்டி’ அடித்த மோடி...

சுருக்கம்

Modi sai about MGR legacy in his speech to the Sri lankan

இலங்கையின் மத்திய மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் டிக்கோயா நகர் ஆகும். மலைப்பகுதி அதிகம் உள்ள இங்கு தேயிலை முக்கிய பயிராகும். இங்கு ரூ.150 கோடி செலவில்  பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்றை இந்திய அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்த மருத்துவமனையை நேற்று திறந்து வைத்தார்.  இதற்காக கொழும்பு நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டிக்கோயா நகருக்கு பிரதமர் மோடி சென்றார். 

மேலும், டிக்கோயோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இதில் அதிபர் சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-, “ இலங்கையில் வாழும் தமிழ்சமூகத்துக்கு மக்கள் உலகிற்கு இரு உன்னதமான பரிசுகளை வழங்கி இருக்கிறார்கள். ஒன்று நடிகரும், தமிழகத்தின் முதல்வராக இருந்த மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரன், 2-வது, கிரிக்கெட் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர்கள் இருவரும் தமிழச்சமுகத்துக்கும் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இருந்த இடைவெளியை நிரப்ப முயற்சித்தார்கள்’’ என்று தெரிவித்தார். 

அதிமுக கட்சியை நிறுவியவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான  எம்.ஜி.ஆர். இலங்கையின் கண்டி நகரில் பிறந்தவர். தமிழகத்தின் முதல்வராக கடந்த 1977 முதல் 1987 வரை இருந்தார். 

அதேபோல, இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனும் கண்டிநகரில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசுக்கு எதிராக பா.ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது என அதிமுக அம்மா அணியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்ரை புகழ்ந்து பேசியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: ரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!