தமிழகத்தின் 9 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு - ஓ.பி.எஸ் அரசு அதிரடி உத்தரவு

First Published Dec 30, 2016, 3:12 PM IST
Highlights


கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தும் தேர்தல் பிற காரணங்களுக்காக ஏடிஜிபிக்கள் , ஐஜிக்கள்  பதவி உயர்வு தள்ளிப்போனது.

தமிழக காவல்துறையில் கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாகவும், டிஐஜிக்கள்  ஐஜிக்களாகவும் , ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாகவும் , ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வுக்கு காத்திருந்தனர்.

 இதில் எஸ்பிக்கள் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர் . டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றனர். ஏடிஜிபிக்கள் நான்கு பேர்  டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால் 6 ஐஜிக்கள் கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தும் 12 மாத காலமாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை . 

ஐஜிக்கள்  ரவி, அம்ரிஷ்புஜாரி, ஜெயந்த் முரளி, கருணாசாகர், சிவனாண்டி, மஞ்சுநாதா ஆகியோருக்கு ஏடிஜிபி பதவி உயர்வும் , ஏடிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், ராதாகிருஷ்ணன் , மகேந்திரன் ஆகியோருக்கு டிஜிபி பதவி உயர்வையும் ஒரே நேரத்தில் ஒப்புதல் அளித்து மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதில் ஏடிஜிபிக்கள் நான்கு பேரும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றனர்.  தேர்தல் அறிவிப்பு வந்த காரணத்தால் ஐஜிக்கள் பதவி உயர்வு தள்ளி போனது. 

இந்நிலையில் ஐஜிக்கள் 9 பேருக்கான பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. 

click me!