ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது! என்ன சொல்கிறது உயர்நீதிமன்ற கிளை!

First Published Feb 5, 2018, 12:42 PM IST
Highlights
Prohibition to use cone-shaped sound amplifiers! Court order!


கூம்பு வடிவ ஒலி பெருக்கி மற்றம் பெரிய ஸ்பீக்கர்களை பயன்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிடை தடை விதித்துள்ளது.

திருமணம், கோவில் திருவிழாக்கள், அரசியல் கட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒலி பெருக்கிகள் மூலம் சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், அரசியல் சார்ந்த பாடல்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. ஆனால், தடையை மீறி, அதிகாரிகள் சிலரின் உதவியுடன் அவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய ஸ்பீக்கர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நகரின் பல்வேறு பகுதிகளில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று, ஜெயராமன் அந்த மனுவியில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், அரசு விதித்துள்ள தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு தொடர்பான நகல்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என உள்துறை தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த 2005 ஆம ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து, அதை அரசு ஆணை மூலம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், இவற்றை அரசு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.

click me!