
பிரபலமான கூரியர் சேவை நிறுவனங்களில் ஒன்று புரபஷனல் கூரியர். இந்நிறுவத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் இன்று, புதன்கிழமை, வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. கண்ணில் வராத பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் நகரில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்துக்கும் வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.
சென்னையில் மட்டும் 15 இடங்களில் புரபஷனல் கூரியர் தொடர்பான வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இதில் ஆறு வருமானவரித்துறை அதிகாரிகள் பங்குபெற்றுள்ளனர் என்று தெரிகிறது.
முதல் தேர்தலிலேயே வெற்றியை ருசித்த திருமகன் ஈ.வெ.ரா.
அலுவலகத்தின் கோப்புகளை ஆராய்ந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தியும் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்திவருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள துணிக்கடை ஒன்றிலும் வருமானவரி சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.