
திரைப்படம் தயாரிக்க ரூ.3.8 கோடி வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது தயாரிப்பாளர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடந்த சில நாட்களாக பல மோசடி புகார்களில் சிக்கி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்தாக கூறி சரத்குமார் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து நடந்த நடிகர் சங்க தேர்தலிலும் தோற்கடிக்கபட்டார். பின்னர், இவர் ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்தாலும் இதுகுறித்த வழக்குகளில் ஜெயலலிதா இவருக்கு சிறிதும் உதவவில்லை.
தொடர்ந்து நான் யாரிடமும் இனி நிற்க மாட்டேன், யாருக்காவது வேண்டுமென்றால் என்னை தேடி வரட்டும் என்று தொலைகாட்சியில் பேட்டி எல்லாம் கொடுத்து விட்டு தினகரனிடம் போய் சரணடைந்தார்.
அவரை பார்த்த அடுத்த நாளே வருமான வரி சோதனையில் சிக்கினார். அவரிடம் எதுவும் கைப்பற்றபடவில்லை என்றாலும் விசாரணைக்காக இழுக்கடிக்கபட்டார்.
அதில் பாம்புசட்டை படம் தயாரிப்பு செலவுக்காக தன்னிடம் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் ரூ. 3.8 கோடி பணம் வாங்கினர்.
ஆனால் தற்போது வரை அந்த பணத்தை அவர்கள் திருப்பி தரவில்லை.
எனவே அந்த பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தது.
நட்சத்திர ஜன்னலில் பாட்டுல வர மாதிரி எப்படியாவது முன்னுக்கு வந்திடலாம்னு சரத்குமார் ட்ரை பண்றாரு, மேல வர நேரம் பார்த்து ஏதாவது மோசடி புகார் வந்து கீழ இழுத்து விட்டுடுது... பாவம்...