
கலாம் சாட் என்ற மிகக் குறைந் எடை கொண்ட செயற்கை கோளை தயாரித்த மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகைகான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் .கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர்.அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்றது.இந்த செயற்கைக்கோள் கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று கலாம் சாட் என்ற பெயரில் நாசா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்த மாணவர்கள் ரிஃபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ்,.தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் திரு.முகம்மது அப்துல் காசிப் ஆகியோருக்கு மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் .ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத்தொகையாக வழங்கி, பாராட்டினார்.