பள்ளி வளாகத்தில் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தா..? நிர்வாகம் பொறுப்பல்ல..பெற்றோரிடம் கட்டாய கையெழுத்தால் சர்ச்சை

By Ajmal KhanFirst Published Jul 26, 2022, 8:47 AM IST
Highlights

பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், பள்ளி நிர்வாகம் பொறுப்பாகாது என்றும் இதன் காரணமாக எந்தவித இழப்பீடும் தர மாட்டோம் என கோவையில் தனியார் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கியதால் புது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மாணவி மர்ம மணம்

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் காரணமாக தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டது. பள்ளி வகுப்பறையும் சேதமடைந்தது. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து தனியார் பள்ளி தாளாளர், ஆசிரியைகள் உட்பட 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளி நிர்வாகம் வேலை நிறுத்த போராட்டமும் அறிவித்தது.

தொடரும் மாணவர்கள் தற்கொலைகள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவிகள் தற்கொலை முயற்ச்சி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இது தனியார் பள்ளி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி “indemnity” பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்ற படிவத்தில் கையெழுத்து வாங்குவதாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பள்ளி நிர்வாகம் புதிய கட்டுப்பாடு

அந்த வகையில்  கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் “indemnity” (பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறு ப்பல்ல) என்ற படிவத்தை பெற்றோர்கள் கையெழுத்திட கட்டாயபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கையெழுத்திடவில்லை என்றால் “TC” மாற்றுச்சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு வற்புறுத்துவதாகவும் புகார் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும் போது, பள்ளியில் “indemnity”என்ற படிவம் வாங்குவது உண்மை தான் ஆனால் பெற்றோர்களை கட்டாயப்படுத்துவது இல்லை என தெரிவிக்கின்றனர். இருந்த போதும் பெற்றோர்கள் மாணவர்களின் படிப்பிற்காக வேறு வழியில்லாமல் கெயெழுத்து போடும் நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஜூலை 28 அன்று நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை… அறிவித்தது தமிழக அரசு!!

click me!