தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முடங்கிய விவகாரம்... தனியார் நிறுவன எம்.டி. அதிரடி கைது

By Narendran SFirst Published Nov 21, 2022, 8:01 PM IST
Highlights

அரசு கேபிளை சட்டவிரோதமாக முடங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவன எம்.டி.யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அரசு கேபிளை சட்டவிரோதமாக முடங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவன எம்.டி.யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வந்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்ததால் கடந்த 2 நாட்களாக சேவை பாதிக்கப்பட்டது. முன்னதாக கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் ராஜன் என்பவருக்கு சொந்தமானது. சுமார் 614 கோடி ரூபாய் அளவிற்கு 37 லட்சத்தி 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு அதை வருடாந்திர நிர்வகிக்கும் சேவைகளையும் இரண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இதையும் படிங்க: மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் படி செய்ய வேண்டிய வேலைகளை அந்த நிறுவனம் காலதாமதம் செய்ததன் காரணமாக, சுமார் 52 கோடி பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது. நிலுவைத் தொகை தொடர்பாக ராஜன் அரசு தரப்பிடம் கடிதம் அனுப்பியும் நிலுவைத் தொகை வராததால் ஆத்திரமடைந்து சட்ட விரோதமாக இணையத்தை பயன்படுத்தி அரசு பொதுமக்களுக்காக அளித்த கேபிள் சேவையை சீர்குலைக்கும் வகையில், தன் கட்டுப்பாட்டில் செயல்படும் 21 லட்சம் தமிழக அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் செட்டாப் பாக்ஸை செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக ராஜன் முடக்கியுள்ளார்.

இதையும் படிங்க: மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம்… குற்றவாளி தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு!!

இதனால் ஒப்பந்தத்தை மீறி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட அரசு கேபிள் சேவையில் இடையூறு ஏற்படுத்திய தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

click me!