
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதும், அதன் மூலம் பலர் உயர் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர், எஸ்ஐயாக பொற்ப்பேற்றுள்ளார். அதிலும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்ற, ஆணையும் பெற்றுவிட்டார்.
தமிழக காவல்துறைக்கான உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை உள்பட 1,031 பேர் எஸ்ஐ பதவிக்கான பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு ஆண்டு நடைபெற்ற பயிற்சி நேற்று முன்தினம் நிறைவுபெற்றது.
இதைதொடர்ந்து, பிரித்திகா யாஷினிக்கு, தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில், பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்ற பிரித்திகா யாஷினி தயாராகிவிட்டார்.