
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.