நாளை தனுஷ்கோடி செல்கிறார் பிரதமர் மோடி.. ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் தரிசனம் - முழு தகவல் இதோ!

Ansgar R |  
Published : Jan 20, 2024, 09:28 PM ISTUpdated : Jan 20, 2024, 09:57 PM IST
நாளை தனுஷ்கோடி செல்கிறார் பிரதமர் மோடி.. ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் தரிசனம் - முழு தகவல் இதோ!

சுருக்கம்

PM Modi Visiting Dhanushkodi : சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்த பிரதமர் மோடி அதன் பிறகு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

வருகின்ற ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு புனித இஸ்தலங்களில் பிரதமர் மோடி புனித நீராடி வருகின்றார். இந்நிலையில் இப்பொது ராமேஸ்வரத்தில் உள்ள பிரதமர் மோடி அவர்கள் நாளை தணுஷ்கோடு செல்லவுள்ளார். அது குறித்த தகவல்கள் இப்பொது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

நாளை காலை 9.30 மணிக்கு ராமர் சேது கட்டப்பட்ட இடமாக கூறப்படும் அரிச்சல் முனைக்கு பிரதமர் வருகை தருகிறார். மேலும் காலை 10:15 மணிக்கு ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பூஜை செய்து தரிசனம் செய்வார் பிரதமர் மோடி. கோதண்டராமன் என்ற பெயருக்கு வில்லுடன் உள்ள ராமர் என்பது தான் பொருள். 

ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. அதற்கு முன் ராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி - வீடியோ!

இது தனுஷ்கோடியில் அமைந்துள்ளது. இங்குதான் விபீஷணன் முதன்முதலில் ஸ்ரீராமரை சந்தித்து அடைக்கலம் கேட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீராமர் விபீஷணனுக்கு முடிசூட்டு விழா நடத்திய இடம் இது என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. புகழ்வாய்ந்த இந்த இடத்தில் நாளை பிரதமர் மோடி அவர்கள் சாமி தரிசனம் செய்யவுள்ளார். 

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார், ஆளுநர் மாளிகையில் இரவை கழித்த அவர் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தினார். இதற்காக சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விமானத்தில் அவர் ராமேஸ்வரம் சென்றார். 

ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடிக்கு கோவில் சார்பில் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானத்தின் சார்பில் பிரதமருக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஶ்ரீரங்கத்தில் இருந்து அயோத்திக்கு சீதனம் எடுத்து செல்லும் பிரதமர் மோடி - என்ன சீதனம்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?