MODI : இன்று முடிகிறது 45 மணி நேர தியானம்... கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலையை வணங்கும் மோடி

By Ajmal Khan  |  First Published Jun 1, 2024, 9:31 AM IST

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் முடிவடைந்து இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டு வருகிறார். இன்று பிற்பகலில் தனது 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்யவுள்ளார்.
 


இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற்றது. இன்று இறுதி கட்ட தேர்தலானது நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணியானது தொடங்குகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பஞ்சாப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

Lok Sabha Election: இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... எத்தனை தொகுதி.? முக்கிய வேட்பாளர்கள் யார்.?

மேகமூட்டத்தால் தடைபட்ட சூரியநமஸ்காரம்

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொள்கிறார். நேற்று காலை சூரிய நமஸ்காரம் செய்தவர் இரண்டாவது நாளாக தியானம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக பிரதமர் மோடி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது மேகமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மோடியால் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் தியான மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி தனது தியானத்தை தொடர்ந்து வருகிறார்.

45 மணி நேர தியானம் முடிவு

காவி உடை அணிந்து தியானம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தனது  45 மணி நேர தனது தியானத்தை முடிக்கிறார். இதனை தொடர்ந்து இன்று மதியம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்குகிறார் மோடி.   ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளார்.

வெயில் கடுமையாக இருக்கு... பள்ளியை 10ஆம் தேதி திறக்காதீங்க..!! ஜூன் 3வது வாரத்திற்கு தள்ளி போடுங்க- ஓபிஎஸ்

click me!