நவ.3 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம்... அறிவித்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!!

Published : Oct 18, 2022, 12:27 AM IST
நவ.3 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம்... அறிவித்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!!

சுருக்கம்

அக விலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. 

அக விலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 

இதையும் படிங்க: அதிர்ச்சி தரும் அபராத தொகை... இத்தனை கோடி வசூலானதா? ஷாக் கொடுத்த காவல்துறை!!

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ளவாறு 01.07.2022 முதல் 4% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையும் படிங்க: சிறுவனின் உயிரை பறித்த குளிர்பானம்.. ஆசிட் கலந்த குளிர்பானத்தால் நேர்ந்த விபரீத சம்பவம்

மேலும் பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3 ஆம் தேதி மாநிலம் முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நவ.3 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே மழை எச்சரிக்கை! வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!