தமிழகத்திற்கு  “ஜனாதிபதி விருது“ ....!! தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ...!

 
Published : Jan 25, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
தமிழகத்திற்கு  “ஜனாதிபதி விருது“ ....!! தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ...!

சுருக்கம்

தமிழகத்திற்கு  “ஜனாதிபதி விருது“ ....!! தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ...!

தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான ஜனாதிபதி விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. இதில் 2016 ம் ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.  இந்த விழாவில்  தேர்தலில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

விருது விபரம்:

தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான விருதை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றார்.

தேர்தல் செலவினங்களை சிறப்பாக கண்காணித்ததற்காக தமிழ்நாடு மண்டல வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் ராய்ஜோஸ் விருது பெற்றார்.

இளம் வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்காக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிச்சாமிக்கு விருது.

அனைத்து தரப்பினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராக ராவிற்கு விருது வழங்கப்பட்டது.

மற்றும்  ஒரு  தனியார்  தொலைக்காட்சிக்கும்  விருது  வழங்கப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?