
தமிழக காவலர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது ...!
வரும் 26 ஆம் தேதி (நாளை மறுதினம் ) குடியரசு தினம் என்பது நம் அனிவருக்கும் தெரியும். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு , பல சிறப்பு விருதுகள் வழங்குவது வழக்கம். அதன்படி
குடியரசு தலைவர் விருது :
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மற்றும், தீயணைப்பு துறையை சேர்ந்தவர்களுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கபடுவது வழக்கம் .
22 காவலர்கள் :
இந்நிலையில், சிறப்பாக செயலாற்றியதற்காக 22 தமிழக காவலர்களுக்கு , குடியரசுத் தலைவர் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் , டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் இந்த விருது வழங்கபடுகிறது என்பது குறிபிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு / காவலர்கள்
ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் போராட்டம் நடைபெற்ற நிலையில் , காவலர்களின் பங்கு போராட்டத்தில் மிகவும் பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.