மார்ச் 1 முதல் பெப்சி- கோக் கடைகளில் விற்க மாட்டோம் விக்கிரமராஜா அறிவிப்பு

First Published Jan 24, 2017, 6:58 PM IST
Highlights


மார்ச் 1-ந்தேதி முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ெதரிவித்து உள்ளார்.

பேட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34- வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வருகிற மே மாதம் 5 ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் சுமார் 10 லட்சம் வணிகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்களை கலந்து கொள்ள அழைக்க உள்ளோம். ஒரு வார காலமாக அமைதியான முறையில் போராடி உலகையே திரும்பி பார்க்கும் வெற்றி பெற்ற மாணவர்கள்,இளைஞர்களை பாராட்டுகிறோம். போராட்டத்திற்கு மதிப்பளித்து உடனடியாக அவசர சட்டம் இயற்றிய தமிழக முதலவரை பாராட்டுகிறோம்.

பெப்சி- கோக் விற்க மாட்டோம்

பெப்சி, கோக் உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும், உள்நாட்டு குளிர்பானங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும், எனவே அன்னிய குளிர்பானங்களின் தீமை குறித்து வரும் பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் அ விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யபடவுள்ளது. வரும் மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் தமிழக கடைகளில் பெப்சி,கோக் உள்ளிட்ட அன்னிய பொருட்களின் விற்பனையை தடை செய்து புறகணிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

click me!