ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி யாருக்கு.? தபால் வாக்கை பதிவு செய்த காவல்துறையினர்

By Ajmal Khan  |  First Published Feb 21, 2023, 1:00 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக வேறு இடங்களுக்கு காவலர்கள் மாற்றப்படுவதால் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.


ஈரோடு தேர்தல்- தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு களம் இறங்கியுள்ளார். ஈரோடு தேர்தலில் மொத்தமாக 77 வேட்பாளர்கள் உள்ளனர்.  இந்தநிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதித்தோர், தபால் மூலம் வாக்குப்பதிவு செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Tap to resize

Latest Videos

பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்

போலீசார் வாக்குப்பதிவு

இதன்படி கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 354 பேர் தாபால் வாக்கு பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பணி காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு போலீசார் மாற்றப்பட்டிருப்பதால். காவலர்கள் தங்களது தொகுதியில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தபால் வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினருக்கான தபால் ஓட்டு போடும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 58 காவலர்கள் வாக்களிக்க உள்ளனர். 

இதையும் படியுங்கள்

ராணுவ வீரர் கொலை..! திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அண்ணாமலை

click me!