அரசு பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து…..ஒருவர் மரணம்.... நாகை அருகே நள்ளிரவில் பயங்கரம் !!!

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 06:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
அரசு பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து…..ஒருவர் மரணம்.... நாகை அருகே நள்ளிரவில் பயங்கரம் !!!

சுருக்கம்

porayar govt transport building collopsed

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு பணிமனையின் மேற்கூரை நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 20 க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம்  தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இரவு ஷிப்ட் முடிந்து பேருந்துகளை நிறுத்திவிட்டு 20 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் இந்த பணிமனை, கட்டட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கட்டட இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும், நடத்துநர்களும் சிக்கியுள்ளனர் 

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கிய  பணிமனையின்  ஊழியர் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர்  உடனடியாக மீட்கப்பட்டனர். காயமடைந்த அவர்கள் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பிவைக்கப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

 

PREV
click me!

Recommended Stories

கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது
நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு | போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டம் !