எண்ணெய் இல்லாத "டயட் சாம்பார்" செய்வது எப்படி தெரியுமா? மாறுங்க..மாறுங்க..."பழசுக்கு மாறுங்க"...!..

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
எண்ணெய் இல்லாத  "டயட் சாம்பார்" செய்வது எப்படி தெரியுமா? மாறுங்க..மாறுங்க..."பழசுக்கு மாறுங்க"...!..

சுருக்கம்

we can prepare the food without oil

எண்ணெய் இல்லாத சமையல்

எண்ணெய் அதிகமாக சேர்த்துக்கொண்டால்,  நம்  உடல்நலத்திற்கு எந்த அளவிற்கு கேடு விளைவிக்கும் என்பதை  பொதுவாகவே தெரிந்த  ஒன்றுதான் ...

இதனையும் மீறி எண்ணெய் இல்லாமல்  உணவு சமைக்க  முடியுமா  என்றால் முடியுமே....அவ்வாறு சமைக்கும்  உணவு முறைகளை  தினமும்  ஒவ்வொன்றாக  பார்க்கலாம்...

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. இதை எல்லாம்  நம்  தாத்தா பாட்டியிடம் கேட்டால் சொல்வார்கள் 

அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வடை என்று பொழுதுவிடிந்தால்… பொழுதுபோனால், எண்ணெயோடுதான் வாழ்க்கை 

விளைவு…

கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர், சர்க்கரை என டாக்டரிடம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்கிற முதல் வார்த்தையே “சாப்பாட்டுல எண்ணெயைக் குறைச்சுடுங்க” என்பதுதான்.

”எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியுமா?” என்று அலறாதீர்கள். இங்கே, பிரபல ‘சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம் உங்களுக்கு பரிமாறிஇருக்கும் 30 வகை சமையலுமே ‘ஆயில் ஃப்ரீ’தான்! கூடவே அவர் சொல்லும் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு …

“இந்த வகை சமையலுக்காக தாளிக்கறப்ப, அடுப்பை மிதமான தீயில வச்சுருக்கணும். அப்பதான் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு மாதிரியான பொருட்கள் கருகாம பொரிஞ்சு வரும்.”

எண்ணெய் செலவுக்கு மட்டுமல்ல… மருத்துவச் செலவுக்கும் குட்பை சொல்லிட்டு டயட் சாம்பார் செய்வது  எப்படி  என  பார்கலாமா ?

டயட் சாம்பார்

தேவையானவை:

துவரம்பருப்பு – அரை கப், ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்…

டயட் சாம்பார் ரெடி!

 

PREV
click me!

Recommended Stories

கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது
நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு | போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டம் !