
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதில், இரவு நேர ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இன்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. அதே போல் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஞாயிற்று கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று எந்த அறிவிப்பும் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் எந்த காரணமும் கூறமால் ஜனவரி 16-ம் தேதிக்கான சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.பொங்கல் முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக 16-ம் தேதி 7,000 அரசு பேருந்துகள் இயக்கப்பட இருந்தன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 10-ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து எதுப்போன்ற கட்டுப்பாடுகள் என்பது குறித்து முறையான அறிவிப்பு வரை முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5000ஐ நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 2,731 ஆக இருந்த நிலையில் நேற்று கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் 2,131 அதிகரித்து 4,862 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 2481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 1489 ஆக இருந்த நிலையில், கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4824 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 38 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 4862 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று புதிய கட்டுபாடுகள் விதிக்கபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.