சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அண்ணா பல்கழைக்கழக எம்.ஐ.டி. கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் தங்கி இருந்த 1,650 மாணவர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி விடுதி மாணவர்கள் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அண்ணா பல்கழைக்கழக எம்.ஐ.டி. கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் தங்கி இருந்த 1,650 மாணவர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
undefined
இதனால் விடுதியில் தங்கி இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 30-ம் தேதியிலிருந்து 1,617 மாணவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக அதில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இன்று மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 53 பேர் கல்லூரியில் உள்ள அந்தந்த விடுதி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிப்பு இல்லாதவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.