ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு.. மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு 'அசத்தல்' அறிவிப்பு !!

Published : Jan 16, 2022, 05:59 AM IST
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு.. மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு 'அசத்தல்' அறிவிப்பு !!

சுருக்கம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டன.

இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் 3 நாட்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு நாளை முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 88 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்புகளை வாங்கியுள்ளனர்.

தமிழர் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக பொங்கல் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2.15 கோடி பேருக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த பொருட்கள் கடந்த 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. இந்த தேதிக்குள் வாங்க முடியாதவர்கள் வருகிற 31ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!