பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!

Published : Jan 09, 2025, 10:04 PM ISTUpdated : Jan 09, 2025, 10:06 PM IST
பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!

சுருக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வரும் 14ம்  தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், மூலமாக பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி. நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மற்றும் வேதாரண்யம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் -7லும், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் 5-லும், அரியலூர், ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள்நடைமேடை எண் 8ல் இருந்தும் இயக்கப்பட உள்ளது.

 மேலும் நாளை தற்சமயம் இயங்கும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என ஒட்டு மொத்த ம் 724 பேருந்துகளும், 11ம் தேதி 780 பேருந்துகளும், 12ம் தேதி 680 பேருந்துகளும், 13ம் தேதின்று 570 பேருந்துகள் இயக்கப்படும். 

இதையும் படிங்க: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!

மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு நாளை 250 கூடுதல் பேருந்துகளும், 11ம் தேதி 300 கூடுதல் பேருந்துகளும் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் 550 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். 

அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 15, 16, 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொங்கலுக்கு முன் 10 முதல் 13 நாட்களில் சென்னையிலிருந்து மேற்படி இடங்களுக்கு 2910 சிறப்பு பேருந்துகளும் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பேருந்துகளும். ராமநாதபுரம் காரைக்குடி தடங்களில் 1300 சிறப்பு பேருந்துகளும். அதேபோன்று பொங்கலுக்கு பின் 16 முதல் 19 நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல ஏதுவாக சென்னை தடத்தில் 2600 சிறப்பு பேருந்துகளும் பிற தடங்களில் 1150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும், அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். 

மேலும், மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் வசதிக்காக ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்கம் குறித்து தொடர்ந்து ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிர மமும் இன் றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை வழங்க ஏதுவாகும்.

இதையும் படிங்க:  ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!

எனவே, பயணிகள் www.tnstc.inஇணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?