
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை பிய்த்தெறிந்த ஒகி புயல் அப்டியே பக்கத்திலிருக்கும் கேரளத்தையும் ஒரு கை பார்த்தது. அங்கே கடலுக்கு சென்ற மீன்வர்கள் பலர் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் ஒகியின் ஓங்காரம் குறித்து கேரள முதல் மந்திரி பினராயி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் திருவனந்தபுரத்தில் ஆய்வு நடத்தினா. பின் வெளியே வந்த அல்போன்ஸ் “கேரள அரசு வேண்டுகோள் விடுத்தது போல் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தேவைப்பட்டால் கூடுதல் உதவி நிதியை வேண்டுமானால் மத்திய அரசு ஒதுக்கும்.
ஒகி புயல் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தேன். அதில் இந்த புயலின் தாக்குதல் குறித்து முன்கூட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டது தொடர்பாக எந்த பதிவுமில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிட்டனர். பாதிப்புகள் நிகழ்ந்துவிட்டன. எனினும் புயல் தாக்கிய பிறகு தேவையான அனைத்து நடவடிக்கையையும் கேரள அரசு எடுத்துள்ளது.” என்று நறுக்கென குட்டிவிட்டு பின் தடவி கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் கேரளா கேட்டுக் கொண்டபடி ஒகியின் ஆட்டத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தால் அப்படியே, தமிழத்திலும் அதன் பாதிப்பு நிகழ்ந்த தனது கன்னியாகுமரி தொகுதிக்கு பெரியளவில் நிதியை வாங்கிக் கொடுத்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கிடலாமென மத்தியமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நினைத்தார். மீட்புப் பணிகளும், நிவாரணமும், ஆறுதலும் சரிவர கிடைக்கவில்லை என்று கடுப்பிலிருக்கும் குமரி மக்கள் தன் மீது காட்டும் பாய்ச்சலை கட்டுப்படுத்த நினைத்தார்.
ஆனால் அல்போன்ஸ் வைத்த ஆப்பு பொன்னாரின் மனதை புண்ணாக்கிவிட்டது.