
இராமநாதபுரம்
வானிலை மையம் அறிவிக்கும் வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் மாறி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கடலில் சிக்கியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க இந்திய கடற்படை, கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் வானூர்திகள் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உறுவாகி வழுவடைந்து புயலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிமை மையம் எச்சரித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி விடுத்துள்ள அறிவிப்பில், "வானிலை மையத்தின் மூலம் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என அறிவிப்பு வரும் வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இராமநாதபுரம் மாவட்டத்தில் 1581 விசைப்படகுகளும், 4375 நாட்டுப் படகுகளுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் பாதுகாப்புடன் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுள் நிறுத்தப்பட்டுள்ளன.