
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டி நடைப்பெற்றது. இதில் 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்ள் கலந்து கொண்டு விளையாடினர்.
இராமநாதபுரம் மாவட்டம், வெண்குளத்தில் அமைந்துள்ள ஷிபான் நூர் குளோபல் அகாதெமி சார்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், 14, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவுகளும், மாணவியருக்கு 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டன.
போட்டி துவக்க விழாவுக்கு, பள்ளியின் செயலர் நூருல்ஹவ்வா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முகம்மது மைதீன் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் தாளாளர் மருத்துவர் ஐ. மன்சூர் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
போட்டிகளின் முடிவில், 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில், ஆர்.எஸ்.மங்கலம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதலிடத்தையும், ஷிபான் நூர் குளோபல் பள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றன.
17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் முதலிடத்தை ஷிபான் பள்ளியும், இரண்டாவது இடத்தை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியும் பெற்றன.
இந்தப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு உச்சிப்புளி இந்தியக் கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். பருந்து அமைப்பின் கமாண்டர் நிதின்ஜோஷி பங்கேற்று பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார்.
சிறந்த ஆட்டக்காரர்களுக்கான விருதினை, சுவார்ட்ஸ் பள்ளி மாணவர் சதீஷ், அதே பள்ளி மாணவி அகல்யா, ஷிபான் பள்ளி மாணவர் முஹம்மது ஜிஹாத் ஆகியோர் பெற்றனர்.
விழாவின் இறுதியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் சீனிவாசன் நன்றித் தெரிவித்தார்.