Pollachi TN Election Result 2022 : பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக… 30 இடங்களில் வெற்றி!!

Published : Feb 22, 2022, 07:48 AM ISTUpdated : Feb 22, 2022, 10:13 PM IST
Pollachi TN Election Result 2022 : பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக… 30 இடங்களில் வெற்றி!!

சுருக்கம்

பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக… அதன் முழுமையான அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  பொள்ளாச்சி தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. கடந்த, 2001 ஆம் ஆண்டு முதல் அங்கு இதுவரை அதிமுகவினரே எம்எல்ஏவாக உள்ளனர். அதிமுகவின் கோட்டையாக இருப்பதால், திமுகவுக்கு எம்.பி., தேர்தலை தவிர, தொடர்ந்து தோல்வி மட்டுமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பொள்ளாச்சி நகராட்சி வார்டுகளில், 50 சதவீதம் பெண்கள் போட்டியிட ஒதுக்கீடு செய்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாட்சி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 இடங்களில் திமுக 30, அதிமுக 3, சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதுக்குறித்த முழுவிவரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். 

திமுக வேட்பாளர்கள் வெற்றி: 
2வது வார்டில் சி.உமாமகேஸ்வரி, 3வது வார்டில் சி.இந்திரா, 4வது வார்டில் நா.கிருஷ்ணகுமார், 6வது வார்டில் வ.சுதா, 7வது வார்டில் க.நர்மதா, 9வது வார்டில் என்.கலைவாணி, 10வது வார்டில் ந.சியாமளா, 11வது வி.ஜோதிமணி, 12வது வார்டில் இ.ஆர்.பழனிசாமி, 13வது வார்டில் செ.மணிமாலா , 14 வது வார்டில் சி.நாகராஜ், 16வது வார்டில் ம.கவிதா, 17வது வார்டில்  எஸ்.கந்தமனோகரி, 18வது வார்டில் க. கீதாலட்சுமி, 20வது வார்டில் சு.பாலமுருகன், 21வது வார்டில் கோ.இளமாறன், 22வது வார்டில் மா.மாணிக்கராஜ்,     23வது வார்டில் ந.லோகநாயகி, 24வது வார்டில் சு.தங்கவேல், 26வது வார்டில் கா.சாந்தலிங்கம், 27வது வார்டில்     ச.விஜயகாயத்ரி, 28வது வார்டில் ஷே.நிலாபர் நிஷா, 29வது வார்டில் அ.பாத்திமா, 30வது வார்டில் ர.நாச்சிமுத்து,    31வது வார்டில் தி.சரிதா, 32வது வார்டில் மு.பெருமாள், 33வது வார்டில் ச.சண்முகப்பிரியா, 34வது வார்டில் கே.வைஷ்ணவி, 35வது வார்டில் எஸ்.கௌதமன், 36வது வார்டில் ப.அ.செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி:
1வது வார்டில் சாந்தி கிருஷ்ணகுமார், 8வது வார்டில் எஸ்.பி.வசந்த், 19வது வார்டில் த.ஜேம்ஸ்ராஜா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

சுயேட்சியை வேட்பாளர்கள் வெற்றி: 
5வது வார்டில் ஜெ.தேவகி, 15வது வார்டில் அ.சையத் யூசப், 25வது வார்டில் ச.பாலகிருஷ்ணவேணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!