
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ராணிப்பேட்டை நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இங்குள்ள 17 வார்டுகளில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். மேலும், வன்னியர், இஸ்லாமியர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர்(பெண்) சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
17 வார்டுகளில் ஆதிதிராவிடர் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் , ஏற்கெனவே வி.சி.க.தனித்து போட்டியிட்டு 2 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதன் படி இந்த தேர்தலில் வி.சி.க. திமுக கூட்டணியில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று நகர மன்ற துமைத் தலைவர் பதவியை கைப்பற்றும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் யார் வேட்பாளர் என்று கணிப்பதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராணிப்பேட்டை பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ராணிப்பேட்டை நகராட்சியில் 8 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.