மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று “டாஸ்மாக்” கடைகள் இயங்காது.. அதிரடி அறிவிப்பு !

Published : Feb 22, 2022, 06:43 AM IST
மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. இன்று “டாஸ்மாக்” கடைகள் இயங்காது.. அதிரடி அறிவிப்பு !

சுருக்கம்

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள சுமார் 1,700 டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்களுக்கு மூடப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 3 நாட்கள் அடைக்கப்பட்டன. கடந்த 17-ந் தேதி முதல் ஓட்டுப்பதிவு நடைபெற்ற 19-ந் தேதி வரை 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டன. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடிய பகுதிகளில் உள்ள கடைகளை மட்டும் மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கடந்த 16-ந் தேதி இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. அதன் பின்னர் நேற்று (20-ந் தேதி) திறக்கப்பட்டது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி இன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாளை 3-ல் ஒரு பங்கு கடைகள் அடைக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு கடைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி.. ஏன் என்னாச்சு?
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி