ஜன.4 அன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்... பொது சுகாதாரத்துறை தகவல்!!

By Narendran SFirst Published Jan 2, 2023, 7:13 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் வரும் ஜன.4 ஆம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் வரும் ஜன.4 ஆம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுக்குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: ரூ.1000 கோடியில் பசுமை காலநிலை மாற்ற நிதி அமைத்து அரசாணை வெளியீடு

சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6 ஆவது வாரத்திலும், 14 ஆவது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: கலை நிகழ்ச்சிகள் நடத்திட வாய்ப்புகள் வழங்கும் திட்டம்... தெரிவு செய்யப்பட்ட இளம் கலைஞர்கள் விவரம் இதோ!!

இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9 ஆவது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 4 ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!