உடனடியாக வெளியேறுங்கள்….போலீஸ் எச்சரிக்கை…

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 07:14 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
உடனடியாக வெளியேறுங்கள்….போலீஸ் எச்சரிக்கை…

சுருக்கம்

உடனடியாக வெளியேறுங்கள்….போலீஸ் எச்சரிக்கை…

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டள்ள தடையே நீக்கக் கோரி  மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,மாணவர்களும் ,பொதுமக்களும் கடந்த கடந்த 17 ஆம் தேதி முதல்  சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள் என குறிப்பிடப்பட்டள்ளது.

.இந்த போராட்டம்  மிகவும் கட்டுப்பாடுடனும்,அமைதியுடனும், பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்று வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது..

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கி வந்துள்ளீர்கள்.

தமிழக அரசின் சீரிய முயற்சியால் மக்கள் அனைவரும் விரும்பியபடி ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும் படி சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக் கொள்கிறது.
 

மேலும் எவ்வாறு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினீர்களோ அதே முறையில் காவல்துறையினருடன் ஒத்துழைத்து கலைந்து செல்லும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!