
போராட்டம் வாபஸ் பெறப்படுமா? நாளை முக்கிய முடிவுகளை அறிவிக்கின்றனர் மெரினா இளைஞர்கள்…
உச்சநீதிமன்ற விதித்த தடை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்களும், மாணவர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இவர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அதில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்த ஓபிஎஸ் விரட்டியடிக்கப்பட்டார்.அதேபோல் தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் போன்றவை நடத்த விடாமல் இளைஞர்கள் தடுத்து றிநுத்தினர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். முதலமைச்சரும் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து மெரினா இளைஞர்கள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுளளனர். அதில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அவசரச்சட்ட முன்வடிவு குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு மூலம் விரைவில் போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் போராட்டம் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.