நான் தமிழ் பொறுக்கிதான்; ஆனால் டெல்லியில் பொறுக்கமாட்டேன்...சுப்பிரமணியசாமிக்கு கமல் ஹாசன் சவுக்கடி பதில்

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
நான் தமிழ் பொறுக்கிதான்; ஆனால் டெல்லியில் பொறுக்கமாட்டேன்...சுப்பிரமணியசாமிக்கு கமல் ஹாசன் சவுக்கடி பதில்

சுருக்கம்

நான் தமிழ் பொறுக்கிதான்; ஆனால் டெல்லியில் பொறுக்கமாட்டேன்...சுப்பிரமணியசாமிக்கு கமல் ஹாசன் சவுக்கடி பதில்

நான் தமிழ்பொறுக்கிதான். எங்கே பொறுக்கனும்னு தெரிஞ்ச பொறுக்கி. ஆனால், டெல்லியில் பொறுக்க மாட்ேடன் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.சுப்பிரமணிய சாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, நிரந்தரமான சட்டம் இயற்ற இளைஞர்கள், மாணவர்கள் தன் எழுச்சியாகக் கூடி மாநிலம் முழுவதும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் 7-வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால், இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களை தமிழ் பொறுக்கிகள் என்று தொடர்ந்து விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், இளைஞர்களும் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்’ சார்பில்  ரஷ்யன் கலாசார மையத்தில் தமிழ் இணையதளம் தொடங்கப்பட்டது. இதில் திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து, நடிகர் கமல் ஹாசன்,  சங்கத்தலைவர் பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலாளர் பி.கண்ணன், ராஜிவ்மேனன், பாரதிராஜா உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

. விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது-

சினிமாவில் எல்லா கலையும் மிக முக்கியமானது. விருமாண்டியில் வரும் மீசை எல்லாம் நானே வைத்துக் கொண்டது.

கொஞ்சம் நாவிதமும் தெரியும். ஒளிப்பதிவும்அதுபோலத்தான். கொஞ்சம். தெரியும்.இவற்றையெல்லாம் நான் கற்றுக்கொண்டது ஒளிப்பதிவாளர்களிடம் தான். அதன் காரணமாகதான் இந்த இணையம் ஒளிப்பதிவாளர்களுக்கு மிக மிக முக்கியமானது. 

நான் புரியாமல் கேட்டவற்றில் இருந்தே அத்தனை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அப்படி இருக்கும் போது புரிந்து கொண்டவர்கள் எழுதினால் எத்தனை உபயோகமாக இருக்கும் ஒளிபதிவாளர்கள் என்றும் களஞ்சியத்துல இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியது அதிகமாக இருக்கிறது.

இப்போ யாரோ தமிழர்களை தமிழ் பொறுக்கிகள்னு சொன்னார்கள். நான் தமிழ் பொறுக்கிதான். இங்கேதான் பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்சபொறுக்கி. டெல்லியில் பொறுக்க மாட்டேன். என்ன திடீர்னு அரசியல் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம், என்று கூறியவுடன் கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது.

மேலும், அவர்கூறுகையில், “ இன்றைக்கு இணையதளத்தின் பலத்தையும், இணைய உலகின் பலத்தையும் தமிழகம் ஜல்லிக்கட்டு போராட்டம் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழில் இணையம் என்பது மிக முக்கியமானத் தேவை. அதை சரியான நேரத்தில் துவங்கியிருக்கிறார்கள். 

நான் என்னைவிட வயது குறைந்தவர்களிடம் கூட பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு நடிக்க வேண்டும் என்பதைவிட, தொழில்நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது ஆசை.

அழுக்கு வேட்டி, சட்டையோட ஒருத்தர் கதை சொல்ல பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ஒருவர் என் அலுவலகம்  வந்தார். அந்த உடையைப் பார்த்து நான் முடிவு செய்து இருந்தால், நான் இப்போ இங்கே இல்லை; கதை சொல்லி முடித்தபின்தான், இவர் எவ்வளவு பெரிய அறிவு ஜீவி என உணர்ந்தேன். 16 வயதினிலேதான் இயக்குநர்தான் அவர்.

நான் கால்ஷீட் குடுக்காம ஓடிப்போய்விடுவேன் என்று வெறும் கேமராவை மட்டும் சில நேரங்களில் ஓட்டி இருக்கார்.

அந்த மாதிரி படம் எடுக்கனும் என்கிற உணர்வு எல்லாம் உள்ள இருந்தாலும் வெளியில் தெரியாது. இந்த மாதிரியான ஒரு விழாவில், என்னையும் உங்களில் ஒருவனாக அழைத்து கலந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்
'குடி'மகன்களுக்கு ஜாக்பாட்.. புத்தாண்டு ஸ்பெஷல்.. டாஸ்மாக் சொன்ன ஹேப்பி நியூஸ்!