
நாளை பள்ளி கல்லூரிகள் செயல்படும் - விடுமுறை கிடையாது
தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி முதல் ஜல்லிகட்டு போட்டி நடத்த வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போரட்டங்கள் ரயில் மறியல், சாலைமறியல் உண்ணாவிரதம் , உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் , மாநிலம் முழுவதும், பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள , அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உணர்வு பூர்வமான , ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து , புதுவை கேரளா, ஆந்திரா கர்நாடகா , வட மாநிலங்கள் மட்டுமின்றி இலங்கை மலேசியா தாய்லாந்து, கனடா துபாய் உள்பட பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பத்தாம் வகுப்பு பண்ணி ரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது . இதனால், தற்போது மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளதால், பாடங்கள் படிக்கவும் செய்முறை பயிற்சி பெறவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே நாளை முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் முழுநேரம் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது