மீண்டும் போராட்டமா? கதறும் காவல்துறை

 
Published : Feb 08, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
 மீண்டும் போராட்டமா?  கதறும் காவல்துறை

சுருக்கம்

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பெருகும் ஆதரவு மீண்டும் மாணவர் போராட்டமாக வெடிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொதுமக்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாறு காணாத பதிவு.

இந்த மாணவர்களின் போராட்டம் உச்சியை ஆட்டிவைத்து மத்திய மாநில அரசுகளை பணிய வைத்தது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலாவை குறித்து முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை உலுக்கியுள்ளது.

மேலும் இதுகுறித்த வீடியோக்களும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

ஓ.பி.எஸ்ஸின் கருத்துக்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து தகவல்களை வரப்பி வருகின்றனர். இதனால் சமூக ஊடகங்களில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பீதியில் உள்ள காவல்துறையினருக்கு பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.

அரசுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!