சவுக்கு சங்கர் பின்னணியில் முக்கிய போலீஸ் அதிகாரி.. டிஜிபி அலுவலகத்தில் அம்பளப்படுத்திய வழக்கறிஞர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2022, 8:42 PM IST
Highlights

காவல்துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரிய தலைவர், டிஜிபி ஏ.கே விசுவநாதன் மற்றும் அரசியல் விமர்சகர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரிய தலைவர், டிஜிபி ஏ.கே விசுவநாதன் மற்றும் அரசியல் விமர்சகர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இவர் அண்ணா திராவிட  மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார் நிர்மலாதேவியின் வழக்கறிஞராகவும்  இருந்தவர் ஆவார்,  இவர் நேற்றைய டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-  கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை திசை திருப்பும் வகையில் தொடர்ந்து அரசியல் விமர்சகர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் தவறான தகவல்களை பேசிவருகிறார், மாணவியின் தனிப்பட்ட தரவுகளை சட்டத்துக்குப் புறம்பாக பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: பணிப்பெண்ணை சித்திரவதை செய்த புகாரில் சீமா பத்ரா கைது... இது பொய்யான குற்றச்சாட்டு என கூச்சல்!!

எனவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன்,  அடிக்கடி சவுக்கு சங்கர் சோர்ஸ் என்று கூறுகிறார், சவுக்கு சங்கரின் சோர்ஸ் டிஜிபி ஏகே விசுவநாதன்தான், அவர்தான் சவுக்கு சங்கர் பின்னணியில் இருந்து மறைமுகமாக தகவல்களை தந்துகொண்டிருக்கிறார். அதேபோல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக ஏ.கே விஸ்வநாதன் இருந்து வரும் நிலையில், அவருடன் சவுக்கு சங்கர் இணைந்து ஊழலில் ஈடுபட்டு வருகிறார், இவர்களுடன் வீட்டுவசதி வாரியத்தில் பணியாற்றும் குமரேசன் என்பவரும் இவர்களுக்கு உடந்தை.

இதையும் படியுங்கள்:  கனல் கண்ணா, நீ சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தான் ... பெரியார் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்.. மதுக்கூர் ராமலிங்கம்.

காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருந்து வரும் ஏ.கே விசுவநாதன் தனது உறவினரான ஒப்பந்ததாரர் நாராயணன் என்பவருக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 கோடி ரூபாய்க்கு டெண்டர் ஒதுக்கியுள்ளார். இதற்கு உறுதுணையாக  செயல்பட பொறியாளர் குமரேசன் என்பவரை சவுக்கு சங்கர் வற்புறுத்தி வருகிறார், இந்த ஊழலின் மூலம் 3 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாக பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டினார். குமரேசன் மீது ஏற்கனவே பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துவரும் நிலையில்,  தற்போது காவல்துறை வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் ஏ.கே விஸ்வநாதன் மற்றும்  சங்கர் ,குமரேசன் ஆகியோர் இணைந்து மூன்று பேரும் தொடர்ந்து பல முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலமாக பெறப்பட்ட லஞ்ச பணத்தின் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என பசும்பொன் பாண்டியன் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் பேசிய அவர் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கரிடம் தொடர்ந்து டிஜிபி விசுவநாதன் பேச  காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இவர்கள் மீதான குற்றச்சாட்டை தகுந்த ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளதாகவும் எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  
 

click me!