
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராமானுஜ ஜீயர். இவர் யாகம் ஒன்றில் பங்கேற்பதாக பழனி வழியாக பொள்ளாச்சிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பழனி புறவழிச் சாலையில் மினிவேன் ஒன்றில் 7 மாடுகள் ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதை பார்த்த ராமானுஜ ஜீயர், அந்த வேனை தடுத்து நிறுத்தி வேனை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
இதையறிந்த எஸ்டிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், பழனி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ராமானுஜ ஜீயர் என்பவர் யார் எனவும், அவருக்கு வாகனத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் அளித்தது யார் எனவும் போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர்.
இதைதொடர்ந்து, ஜீயருக்கு ஆதரவாக பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் காவல்நிலையத்திற்கு வந்துவாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டி.எஸ்.பி வெங்கட்ராமன் இருதரப்பையும் கலைந்து செல்லுமாறுஎச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வெளியேறிய ராமானுஜ ஜீயர் மீது கல்வீச்சு நடைபெற்றது. இதில், இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீதும் கல்வீசப்பட்டது.
இதைப்பார்த்த போலீஸார், தடியடி நடத்தி இருதரப்பையும் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.