சீன எஞ்சின்களை அகற்ற போலீசார் நடவடிக்கை - வெற்றி பெறுமா மீனவர்கள் போராட்டம்...!

First Published Oct 23, 2017, 12:27 PM IST
Highlights
Police have taken action to remove the Chinese engine fitted in the forces of Chennai cassemouth.


சென்னை காசிமேட்டில் விசைப்படகுகளில் பொருத்தப்பட்ட சீன எஞ்சின்களை அகற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

திருவொற்றியூர் அருகே காசிமேடு கிராமத்தில் ஏராளமான மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் அதிவேக மோட்டாரான சீன இன்சினை பயன்படித்தி மீன்கள் பிடிப்பதாகவும் இதனால் தங்களது வாழிவாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டினர். 

இதைகண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

இதையடுத்து மீனவப் பிரதிநிதிகளுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு போலீசார் வந்துள்ளனர். 

மேலும் சென்னை காசிமேட்டில் விசைப்படகுகளில் பொருத்தப்பட்ட சீன எஞ்சின்களை அகற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
 

click me!