கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளிப்பு! நெல்லையில் பரபரப்பு!

 
Published : Oct 23, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளிப்பு! நெல்லையில் பரபரப்பு!

சுருக்கம்

Nellai 4 people fire

திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரின் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இசக்கிமுத்து, தனது குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டர்.

அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இசக்கி முத்து, கந்து வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. பணத்தை திரும்ப தர வலியுறுத்தி கந்து வட்டிக்காரர்கள், தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாகவும், கந்து வட்டிகாரர்களுக்கு ஆதரவாக போலீசர் டார்ச்சர் செய்து வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இசக்கிமுத்து, மனைவி, குழந்தைகளுடன் தீ வைத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தீக்குளிப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு