அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி - காசிமேடு மீனவர்கள் சாலை மறியல்... போலீஸ் தடியடி...

 
Published : Oct 23, 2017, 10:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி - காசிமேடு மீனவர்கள் சாலை மறியல்... போலீஸ் தடியடி...

சுருக்கம்

fishermans protest against minister jayakkumar

சீன இன்சினை பயன்படுத்தி அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன் பிடிப்பதாகவும் உடனடியாக அந்த இன்சின்களை அகற்ற வேண்டும் எனவும் காசிமேட்டில் மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருவொற்றியூர் அருகே காசிமேடு கிராமத்தில் ஏராளமான மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் அதிவேக மோட்டாரான சீன இன்சினை பயன்படித்தி மீன்கள் பிடிப்பதாகவும் இதனால் தங்களது வாழிவாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அமைச்சர் ஜெயக்குமார் பினாமி பெயரில் 50 க்கும் மேற்பட்ட படகுகளை இறக்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதைகண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை விட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு