செங்கல்பட்டு அருகே 3 இடங்களில் சாலை விபத்து - 4 பேர் பலி...!

 
Published : Oct 23, 2017, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
செங்கல்பட்டு அருகே 3 இடங்களில் சாலை விபத்து - 4 பேர் பலி...!

சுருக்கம்

Four deaths in a road accident in different places near Chengalpattu have caused tragedy among the people.

செங்கல்பட்டு அருகே வெவ்வேறு 3 இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் முன்பு தாமஸ் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தாம்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதேபோல் செங்கல்பட்டு அருகே புளிப்பாக்கத்தில் ஆறுமுகம் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதேபோல் புளிப்பாக்கத்தில் சாலை தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கோதண்டம் என்பவர் உயிரிழந்தார். 

மேலும் செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி சின்னம்மா என்பவர் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு