இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.! தப்பி ஓடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்- கிருஷ்ணகிரியில் பரபரப்பு

Published : Feb 21, 2025, 01:36 PM ISTUpdated : Feb 21, 2025, 02:10 PM IST
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.! தப்பி ஓடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்- கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சுருக்கம்

கிருஷ்ணகிரியில் உறவினருடன் சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போதை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரை தாக்கிய குற்றவாளிகளை தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

தமிழக்த்தில் பாலியல் குற்ற சம்பவம்

தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பங்கள் தினந்தோறும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான 12 பாலியல் சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கிற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மலையின் மேல் தர்கா மற்றும் கோவில் உள்ள நிலையில் அந்த கோவிலுக்கு கடந்த 19 தேதி மதிய நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தனது உறவினருடன் சென்ற பெண்ணை சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பிடிங்கி கொண்டு அவர்களை தாக்கினர். 

 கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து  பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்களை கைது செய்ய போலீசார் களம் இறங்கினர.் இதில் முதல் கட்டமாக  இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர்.  அடுத்ததாக தலைமறைவாக இருந்த மற்ற இரண்டு பேர் பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம்  பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

அப்போது குற்றவாளிகள் போலீசாரை கத்தியால் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளி காலில் காயம் ஏற்பட்டது.  மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் கால் முறிவு ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

PREV
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!