டாக்டருக்காக சடலத்துடன் பேரம் பேசும் போலீஸ் - பகீர் காட்சிகள் (வீடியோ)

 
Published : Oct 19, 2016, 07:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
டாக்டருக்காக சடலத்துடன் பேரம் பேசும் போலீஸ் - பகீர் காட்சிகள் (வீடியோ)

சுருக்கம்

விழுப்புரத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவன் உயிருக்கு மருத்துவமனை சார்பாக டீல் பேசும் போலீஸ் பெண் டிஎஸ்பி 
விழுப்புரத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவன் உயிருக்கு மருத்துவமனை சார்பாக போலீஸ் பெண் டிஎஸ்பி மகனே போய் விட்டான் இன்னும் என்ன உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என டீல் பேசும் அதிர்ச்சி வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது அத்ன் காட்சிகள் இதோ.....

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சதிஷ்(15 வயது) பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்ப்பட்டது. இதனை அடுத்து திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அவருக்கு குடல் வால் பாதிப்பு  உள்ளதாக கூறி  அதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும்  என கூறி டாக்டர்  ஆபரேஷனும் செய்துள்ளார். ஆனால் சில மணி நேரத்தில் சதிஷ் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான டாக்டர் அதை மறைத்து சதிஷ் உடலை அவரது வீட்டுக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டார். 
  உறவினருக்கே தெரியாமல் உடலை அனுப்பி வைத்தது, தெரிந்த  உறவினர்கள்  மீண்டும் அதே மருத்துவமனைக்கு உடலை கொண்டுவந்து நியாயம் கேட்க, டாக்டரோ சதிஷ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்  என்று கூறியுள்ளார். 
தனது மகன்  தவறான சிகிக்சையால் தான் இறந்தார் என்று தாயார் மற்றும்  உறவினர்கள் போராட்டம் நடத்த, அங்குவந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் முரளி ஆகியோர் உயிரிழந்த மாணவன் சதிஷின் உறவினர்களிடம் , உங்களுக்கு டாக்டர் என்ன செய்யணும், என்ன எதிர்பாக்கறீங்க சொல்லுங்க என பேரம் பேசுகின்றனர். இந்த வீடியோ அங்குள்ள ஒருவரால் எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் வந்தால் அதை பதிவு செய்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதுதான் போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆனால் டிஎஸ்பியே அந்த மருத்துவமனைக்கு சான்றிதழ் தருவதும் போனவன் போய் விட்டான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என பேரம் பேசும் வேலையை செய்வதும் சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது..

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!