
ஈரோட்டில் ரூ.7.50 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம், 3 நந்தி சிலைகளை கடத்திய 3 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஈரோடு ராஜ ராஜேஷ்வரி லாட்ஜில் மரகதலிங்கம் ஒன்றை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக டிஜிபி ராஜேந்திரனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர் இதுகுறித்த தகவலை சிலைதடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்க வேலுவுக்கு தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் ராஜ ராஜேஷ்வரி லாட்ஜில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அறை எண் 21 ல் சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரூ.7.50 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம், 3 நந்தி சிலைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதைதொடர்ந்து அந்த ரூமில் தங்கியிருந்த திருச்சங்கோட்டை சேர்ந்த மணிராஜ், ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.