
கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை நன்றாக இருந்தது. குறிப்பாக சென்னையில் அதிக மழை இருந்ததால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்தது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் பெரிதளவில் மழை இருக்காது என தி தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை குறித்த தி தமிழ்நாடு வெதர்மேன் பதிவில்... இன்று முதல் செவ்வாய்கிழமை வரை சென்னை மற்றும் தமிழக வடபகுதி கடற்கரை பகுதிகளில் மழை சிறப்பாக இருக்கும். நமக்கு ஏற்றார்போல் காற்று சாதமாக வீசிவருகிறது. பகல்நேரத்தில் கூட, நல்ல மழையை எதிர்பார்க்கலாம், அதற்காக வெள்ளம் வந்துவிடும் அளவுக்கு மழை இருக்குமான என அச்சப்படாதீர்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அங்கிருந்து வரும் ஈரப்பத காற்றால், பகல்நேரத்திலும் மழை இருக்கும்.
சென்னை மற்றும் வடதமிழக கடற்கரைப்பகுதிகளில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம். அவ்வப்போது சில இடைவெளிகளும் இருக்கும். மேகக்கூட்டங்கள் எப்படி குவிகிறது, எப்படி உருவாகிறது என்பதை பொருத்து மழை முடிவுக்கு வரும். இப்போதுள்ள நிலையில், 100 சதவீதம் மழையை எதிர்பார்க்கலாம்.
ஆனால், வெள்ளம் குறித்து அச்சப்பட வேண்டாம், கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழை போல் இருக்காது. காற்று கிழக்கு திசையில் இருந்து வீசுகிறது, அதனால், வட தமிழக பகுதிகளுக்கு மழை அளவாகவே இருக்கும்.
நான் இணைத்துள்ள வரைபடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, எப்படி, ஈரக்காற்றை வடதமிழகம் பக்கம் தள்ளி, மேக்கூட்டங்களை அடுக்காக உருவாக்குகிறது என்பதை காணலாம். ெடல்டா பகுதியில் இருந்து மேகக்கூட்டங்கள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் நகரக்கூடும். இதனால், வேலூர், திருவண்ணாமலையில் பெய்த மழைபோல் அங்கும் இருக்கும்.
மழைக்கு இடைவெளி…. வரும் 8-ந்தேதி இரவு முதல் சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் மழை பொழிவு குறைந்து நிற்கத் தொடங்கும்.
இதற்கிடையே, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, டெல்டா மாவட்டங்களிலும் திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளிலும் சிறப்பான மழை பெய்துள்ளது.
இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு வருமாறு-
நெல்லை மாவட்டம்…
களக்காடு- 153 மி.மீ
பாபநாசம் அணை- 142 மி.மீ
மணிமுத்தாறு அணை- 124 மி.மீ
நாங்குநேரி- 90 மி.மீ
வள்ளியூர்- 79 மி.மீ
அம்பாசமுத்திரம்- 68 மி.மீ
சேரன்மாதேவி- 60 மி.மீ