மழையால் தொடரும் சோகம்...! - மின்னல் தாக்கி விவசாயி பலி...!

Asianet News Tamil  
Published : Nov 05, 2017, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
மழையால் தொடரும் சோகம்...! - மின்னல் தாக்கி விவசாயி பலி...!

சுருக்கம்

former death in kumbakonam By lightning

கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் விவசாயி ஒருவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம்  முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையை பொறுத்தவரை தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. 

கனமழை காரணமாக ஆங்காங்கே மின் ஒயர்கள் அறுந்து தொங்குகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அறுந்து கிடந்த மின் ஒயரால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். 

மற்றும் சிலர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் பாபநாசம் அருகே வயலில் வேலை செய்த போது மின்னல் தாக்கியதில் முருகேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

திடீர் ட்விஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக Ex மத்திய அமைச்சர்..! தட்டித் தூக்கும் விஜய்..!
ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்