நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. இந்த கட்சி தருமபுரி, சேலம், ஆரணி, திண்டுக்கல், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 தொகுதியில் போட்டியிட்டது.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. இந்த கட்சி தருமபுரி, சேலம், ஆரணி, திண்டுக்கல், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 தொகுதியில் போட்டியிட்டது. இதில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணிக்குட் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க: VCK: ஒரே கல்லில் இரண்டு மாங்கா.. குஷியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி.. 25 ஆண்டுகால கனவு நினைவானது!
மீதமுள்ள 9 தொகுதிகளில் பாமக 3வது இடத்தை பிடித்தார்கள். இதில், 6 தொகுதியில் டெபாசிட்டை இழந்தது. ஏற்கனவே மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்த பாமக ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி மாம்பழம் சின்னத்தை பெருவதை வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த முறை மக்களவை தேர்ததலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கட்டது.
இதையும் படிங்க: வாய்ப்பு உங்களைத் தேடி வருது விட்டுடாதீங்க சந்திரபாபு நாயுடு! துணைப் பிரதமராயிடுங்க! பீட்டர் அல்போன்ஸ்
இந்நிலையில், பாமக போட்டியிட்ட 10 மக்களவை தொகுதியில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதை அடுத்து அந்த கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில் தற்போது பாமக கட்சியும் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது குறிப்பட்டத்தக்கது.